
முஸ்லிம் அல்லாதோரின் மதக் கட்டுப்பாட்டு சட்டம் சட்ட உரிமையை மீறும் செயல் என்று ஜொகூர் உலு திராம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இதை வன்மையாக எதிர்க்கிறேன். முஸ்லீம் அல்லாதோர் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர்துறை இலாகா சமயப்பிரிவு துணையமைச்சர் அக்மாட் மார்ஜூக் ஷாரி கூறியிருப்பதை கண்டிக்கிறேன். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று எஸ். கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். இது மக்களிடையே வேதனையும் பதற்றத்தையும் உருவாக்கும். மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த மலேசிய குடும்பம் கொள்கைக்கு எதிரானது என்று அவர் சொன்னார். நல்லிணக்கத்தோடு வாழும் மலேசிய மக்களிடையே அச்ச உணர்வை இது ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
