
தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாநிலம் மாறிய போதிலும் சிலாங்கூர் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக பின்பற்றி வர வேண்டும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். மக்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு மீண்டும் நோய்த் தொற்று பரவுவதற்கும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கும் வழி வகுக்கும். தடுப்பூசித் திட்டத்தினால் நோய்த் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக கூறிய அவர், நாம் எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றத் தவறினால் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு காணும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தார்.
