33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மலேசிய அரசியல் வரலாற்றில் புதிய பரிமாணம்; அரசாங்கம் மற்றும் நம்பிக்கை கூட்டணி இடையே அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்

🔥 Views : 10
👁 Reading Now : 39

*கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளைக் கையாள்வதற்கும் நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நாட்டில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதற்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிப்பதில் இரு தரப்பும் கவனம் செலுத்தும் என்று மத்திய அரசும் பக்கத்தான் கூட்டணியும் அறிவித்துள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி நாட்டில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதில் இரு தரப்பும் முன்னுரிமை அளிக்கும். நாட்டின் நிர்வாகத்தில் குறிப்பாக, நாடாளுமன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் அரசு நிர்வாகத்தில் உருமாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்துவதிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் பக்கத்தான் ஹரப்பானின் சார்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் உப்கோ தலைவர் டத்தோஸ்ரீ மாடியூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles