
கோவிட் தொற்றை முறியடிக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து அக்கறைக் கொள்ள வேண்டும் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா அகமட் ஷா நாடாளுமன்றக் கூட்டத்தில் உத்தரவிட்டார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களும் நேரடியாகக் களமிறங்கி மக்களின் சிரமங்களை அடையாளம் காண வேண்டும். அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு நிறுவனங்கள் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பதோடு அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கான அடைவுநிலையையும் கண்காணிக்க வேண்டும் என்றார்
