26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

பெட்டாலிங் ஜெயா மணிமன்றம் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக புதிர்ப்போட்டி

நாட்டின் 64ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டுப் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம் புதிர்ப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படும் இப்போட்டி, வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி இயங்கலை வாயிலாக நடைபெறும். ஆரம்பப் பள்ளியின் 4, 5 மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாணவர்கள் Kelab Bell Belia Tamil Petaling Jaya என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு 014-6257357 என்ற எண்ணில் சிவநேசனை தொடர்பு கொள்ளலாம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles