
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ இந்திய ரூபாய் மதிப்பில் 4,442 கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா அவை ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தாலிபன் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
