
பக்காத்தான் ஹராப்பான் எதிர்கட்சியாகவே தொடர்ந்து நீடிப்பது மட்டுமின்றி அடுத்தாண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று பி.கே.ஆர். தொடர்புப் பிரிவு இயக்குநர், பாமி பாட்சில் தெரிவித்தார். இவையனைத்தும் அரசுக்கும் பக்கத்தானுக்கும் இடையே செய்துக் கொள்ளப்பட்ட வரலாற்றுப்பூர்வமானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள விவகாரங்களில் அடங்கும். இது அரசுக்கும் பக்கத்தானுக்கும் இடையே கையெழுத்தானப் புரிந்துணர்வு ஒப்பந்தமாகும் என்று பாமி பாட்சில் குறிப்பிட்டார்.



