
தெற்காசிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிகழலாமென ஜப்பான் தூதரகம், அந்நாடுகளில் உள்ள தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மலேசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலையும் பெறவில்லை என்று புக்கிட் அமான் சிறப்பு பிரிவு இயக்குனர் டத்தோ சம்ரி யாஹ்யா கூறினார். இருப்பினும் போலீஸ் அதன் தொடர்பில் எப்போதும் முழு விழிப்பு நிலையில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.
