
சில மாதங்களுக்கு முன் உடைப்பட்ட சுபாங் அகோர காளியம்மன் ஆலயத்திற்கு மாற்று நிலத்தைப் பெற்று தரும்படி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் சிறப்பு அதிகாரி டாக்டர் குணராஜிடம் இந்து ஆலயங்கள் பராமரிப்பு குழு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
லெம்பா சுபாங் வட்டாரத்தில் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
அந்த வகையில் உடைப்பட்ட ஆலயத்துக்கு மாற்று நிலம் பெற்று தரும் முயற்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்று சுமுகமான முறையில் தீர்வு காணும்படி டாக்டர் குணராஜுவை இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை புரிந்த டாக்டர் குணராஜ் நிலவரங்களை நேரில் கேட்டறிந்தார்.
ஆலயத் தலைவர் கணேசன்,ராமாஜி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டு ஆலயத்திற்கு மாற்று நிலம் பெற்று தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
