
மனிதனுடைய வாழ்க்கையை உள்ளங்கைக்குள் அடக்கியது செல்போன் என்றால் அது மிகையாகாது. உலகின் எந்தவொரு தகவல்களையும் நொடிப்பொழிதில் வழங்குகிறது. செல்போன் முதலில் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஸ்மார்ட் போன் அறிமுகமான பின், குட்டி கம்ப்யூட்டராக செயல்பட்டு வருகிறது. செல்போனில் வீடியோ, போட்டோ எடுக்கும் வசதி இருப்பதால் அதை பயன்படுத்துபவர்கள், கண்டிராத பிரமிப்பான இடங்களை தங்களது செல்போனுக்குள் வளைத்துப்போட்டுக்கொள்வார்கள். அதேபோல்தான் செல்பி மோகம் இமாச்சல பிரதேசத்தில் இன்று நான்கு பேர் உயிரை பறித்துள்ளது. செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
