
தம்மைச் சுற்றித் திருடர்கள் இருப்பதை உணர்ந்ததால்தான் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கைத் தீர்மானத்தை மேற்கொள்வதைத் தவிர்ப்பதாக ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர், காலிட் அப்துல் சாமாட் தெரிவித்தார். தாம் நம்ப முடியாதத் திருடர்கள் கும்பலுடன் இருப்பதை அவர் நன்கு உணர்ந்து விட்டார். அதனால்தான் இஸ்மாயில் சப்ரி நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பை மேற்கொள்ள விரும்பவில்லை என்றார்.
