
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இவ்வாண்டில் மட்டும் 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர்’ என்று , ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயரும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகளும் மருத்துவ, கோவிட் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றையும் வழங்க ஐ.நா., அதிக முன்னுரிமை அளிக்கும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
