
பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இப்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கல்வியமைச்சு பரிசீலித்து வருகிறது. மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ முகமது அலாமின் கூறினார். மக்களைவையில் நேற்று சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்றினால் பெரும்பாலான குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துதவற்கு சாத்தியம் உள்ளதாக என்று மஸ்லி கேள்வியெழுப்பிருந்தார். பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 முதல் நவம்பர் 22 வரை 6,303 மாணவர்களுக்கு இந்த காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



