27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

60 லட்சம் அமெரிக்கா டாலர் விவகாரம் 3 அதிகாரிகள் மீது போலீசார் விசாரணை

🔥 Views : 6
👁 Reading Now : 41

அறுபது லட்சம் அமெரிக்க டாலர் காணாமல் போன விவகாரம் நாட்டில் தற்போது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தை சேர்ந்த 3 அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மூன்று உயரதிகாரிகளை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மலேசிய வெளிநாட்டு உளவு இயக்கத்தின் தலைமை இயக்குனர் ஒருவருக்கு சொந்தமான இந்த பணம் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த மூன்று அதிகாரிகளை போலீஸ் துறை விசாரணைக்கு அழைத்துள்ளது என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles