33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமசீரான மானியம்

🔥 Views : 7
👁 Reading Now : 68

இவ்வாண்டு இறுதியில் எதிர்கட்சியினர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமசீரான மானியம் வழங்கப்படும் என்று பிரதமர் துறையின் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர், டத்தோ மஸ்துரா முகமட் யாசிட் தெரிவித்தார். பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒப்புக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செப்டம்பர் தொடங்கி வரும் டிசம்பர் மாதம் வர சமசீரான ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பங்கேற்கும் தரப்புக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட போதிலும் இம்மாதத் தொடக்கத்தில் அரசும் பக்காத்தான் ஹராப்பானும் இணைந்து கையெழுத்திட்ட உருமாற்ற மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமசீரான ஒதுக்கீட்டு நிபந்தனை உள்ளடக்கப்பட்டிருந்தது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles