
மீட்சி திட்டத்தின் கீழ் 3ஆம் கட்டத்திற்கு பகாங் மாநிலம் சென்றிருப்பதால் மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டத்திற்கு இன்று முதல் அனுமதிக்கப்படுவதாக பகாங் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார். இதன் மூலம் மாவட்டங்களுக்கிடையிலானச் சாலைத் தடுப்பு இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு வருகிறது. பகாங் மாநில மக்கள் அனைவரும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் எஸ்.ஒ.பி.யை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
