
அம்னோவின் ஆலோசனை மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து தெங்கு ரசாலி ஹம்சா விலகியது தொடர்பில் வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் இது முக்கிய விவகாரமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சித் தலைமைச் செயலாளர், டத்தோ அகமட் மஸ்லான் தெரிவித்தார். இந்த கூட்டம் சாதாரணமான ஒன்றல்ல, காரணம் அரசியல் உட்பட பல்வேறு விவகரங்கள் குறித்து விவாதிக்க இதற்கு முன் அடிக்கடி நடத்தப்பட்டு வந்தது. இக்கூட்டம் இரவு நேரத்தில் நடத்தப்படும். இதில் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர், தெங்கு ரசாலி ஹம்சா தமது அம்னோ ஆலோசனை மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர்.



