25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

பயங்கரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்! இந்திய குற்றச்சாட்டு

🔥 Views : 6
👁 Reading Now : 54

அமெரிக்காவில் ஐ.நா. பொதுசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாநாட்டுக்காக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் ஹிலானி குறித்தும் பிரச்சினையை கிளப்பினார். ஐ.நா. பொது சபையில் இந்தியாவின் முதல் செயலாளர் சினேகா துபே இதற்கு பதிலடி கொடுத்தார். பயங்கரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்தான். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தடை செய்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான்தான் அடைக்கலம் கொடுத்தது உலகிற்கே தெரியும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது, நிதி உதவி செய்வது, பயிற்சி அளிப்பது மற்றும் தீவிரமாக ஆதரிப்பது என்பது பாகிஸ்தானின் நீண்ட கால கொள்கையாக இருக்கிறது என்று அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles