25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார் ரங்கசாமி

புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந்தேதி பதவியேற்றார்.

பதவியேற்புக்கு முந்தைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பதவியேற்புக்கு பிறகும் ரங்கசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்.

9-ந்தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் ரங்கசாமிக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ்

அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று தீவிரம் குறைவாகவும், உடல்நிலை சீராகவும் இருந்தது. தொடர் சிகிச்சையால் ரங்கசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஓரிருநாளில் புதுவைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கட்சியின் செயலாளர் ஜெயபால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரங்கசாமி புதுவை திரும்புகிறார்.

புதுவைக்கு திரும்பினாலும் வீட்டு தனிமையில் மேலும் சில நாட்கள் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles