26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கிள்ளானில் தடுப்பூசி மையம் தேவை சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்து

🔥 Views : 6
👁 Reading Now : 63

கிள்ளானில் மேலும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசி மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார். சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் இந்த கோரிக்கையை முன் முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார்.. கிள்ளான் போன்ற பெரிய நகரங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படக்கூடிய தடுப்பூசி மையம் அமைக்கப்பட வேண்டும். தடுப்பூசி பெறாதவர்கள் அதனை விரைந்து பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அந்த தடுப்பூசி மையம் செயல்பட்டால் போதுமானது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளேன் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles