27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

டூசுன் டுரியான் தோட்ட பாட்டாளிகளின் வீட்டு மனை பிரச்சினையை தீர்க்க அனைத்து தரப்பினரும் விரைந்து செயல்பட வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 57

கடந்த ஒரு மாதமாக காலமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கி இருக்கும் பந்திங் டூசுன் டுரியான் முன்னாள் தோட்ட தொழிலாளர்களின் வாழ்நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அனைவரும் அரசியல் பாகுபாடின்றி விரைந்து செயல்பட வேண்டும் என்று கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் தெரிவித்தார். முன்னாள் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி மற்றும் தோட்ட நிலம் மேம்பாட்டு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் குடியிருப்பாளர்கள் அனைவரும் மீண்டும் தோட்டத்தில் இருந்து வெளியேற்றபடுவதற்கான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். முன்றாவது முறையாக இந்த தோட்டத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து சிலாஙகூர் மாநில அரசும், மோரிப் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னுல்,கோலா லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூக தலைவர்கள் தொடர்ந்து மேம்பாட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்பாக ஒரு சிறப்பு சந்திப்பும் இந்த தோட்டத்தில் நடைபெற்றது. மின்சார இணைப்பு மீண்டும் இணைக்கப்படும் வரை தற்காலிகமாக சோலார் விலக்கு பொருத்தப்பட்டால் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles