
தேசிய தடுப்பூசி பணிக்குழு திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 843 பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 2 கோடியே 20 லட்சத்து 59 ஆயிரத்து 329 பேர் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதனிடைய 12 முதல் 17 வயது வரையிலான 237,245 இளையோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
