
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மேற்கொண்ட முயற்சியால் கலிபோர்னியா தோட்டப் பள்ளிகளுக்கு அழகான தரை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 99 ஆண்டுகளுக்கான இந்த வீட்டின் விலை வெறும் 10 வெள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கலிடோனியா தோட்ட பாட்டாளிகளுக்கு சொந்த தரை வீடுகளை கட்டிக்கொடுத்து சாதனை படைக்கும் ஒரு அரசாங்கமாக பினாங்கு மாநிலம் விளங்குகிறது.

பேராசிரியர் டாக்டர் ராமசாமி மேற்கொண்ட முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வீடுகளை கட்டும் பணிகளை தமிழ் நெஞ்சரும் எக்கோ வோர்ல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ ராஜூ தலைமையிலான எக்கோ வோர்ல்டு நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
