32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

மலாக்கா சட்டமன்றத்தை கலைக்கும் முடிவை வாபஸ் பெறும்படி மாமன்னரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பம்

🔥 Views : 9
👁 Reading Now : 68

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை மாநில ஆளுநர் துன் முகமட் அலி ரூஸ்தாம் வாபஸ் பெறும்படி மாமன்னர் ஆலோசனை கூற வேண்டும் என்று மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அட்லி தெரிவித்தார் . மலாக்கா மாநில முதல்வர் சுலைமானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்த இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மலாக்கா சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பான முடிவை ஆளுநர், துன் முகமட் அலி ருஸ்தாம் மீட்டுக் கொள்ள மாமன்னர் ஆலோசனை வழங்கும்படி 15 சட்டமன்ற உறுப்பினர்களும் மாமன்னரைக் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles