25.7 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

மலாயா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் வாரிய உறுப்பினராக இளைஞர் டனேஷ்ராஜ் நியமனம்

🔥 Views : 37
👁 Reading Now : 27

மலாயா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் வாரியத்தில் ஓர் உறுப்பினராக 26 வயது இளைஞர் டனேஷ் ராஜ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.துடிப்புமிக்க இளைஞரான இவர் மிகவும் பொறுப்புடன் செயலாற்றுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது.2021 அக்டோபர் 4 ஆம் தேதி 2024 அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் அவர் இந்த பொறுப்பை வகிப்பார். இளைஞர் டனேஷ் நாகராஜன் இப்பல்கலைக் கழகத்தின் கலாச்சாரப் பிரிவின் பட்டதாரியும் மலேசிய இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். நாட்டின் பழமை வாய்ந்த மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய இளைஞருக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம்,நாட்டு இந்திய சமுதாயத்துக்கும் பெருமையாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles