29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் செலாயாங் எம்பி வில்லியம் விளக்கம்

🔥 Views : 6
👁 Reading Now : 53

வெளிநாடுகளில் சொத்து, முதலீடு, நிதி என்னும் பெயரில் இரகசியமாக சொத்து வைத்திருப்பவர்களின் உலகளாவிய விவரத்தை ‘பண்டோரா பேப்பர்ஸ்’ அண்மையில் வெளியிட்ட செய்தியில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த செலாயாங் எம்பி வில்லியம்ஸ் லியோங் லியோங் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதன் தொடர்பில் வில்லியம்ஸ் லியோங் விளக்கம் அளித்துள்ளார். நான் சம்பந்தப்பட்ட ஆஃப்ஷோர் நிறுவனத்தின் பெயர் சோலிஸ்டர் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் என்றும் அதில் உதவித் தலைவராக இருந்த பிலிப்பைன்ஸ் தேசிய எஃகு நிறுவனத்துடன் 1994-இல் இணைக்கப்பட்டது. அப்பொழுது, என்னுடைய நிதி மற்றும் வருவானத்தை இந்த நிறுவனத்தின் பெயரில் பத்திரப்படுத்துவது பாதுகாப்பானது என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியதன்படி செயல்பட்டதாக வில்லியம் தெரிவித்தார். இது சட்டப்பூர்வமானது என்றும் இருநாடுகளின் வர்த்தக சட்டம் மீறப்படவில்லை என்றார் அவர். மெக்சிக்கோவில் உள்ள பிரிட்டிஷ் வர்ஜின் தீவு நிறுவனத்தில் உள்ள நிதி, தன்னுடைய சட்ட நிறுவனம் சம்பத்தப்பட்டது என்றும் அதுவும் கட்சிக்காரர்கள் தொடர்புடையது என்பதால் அவர்கள் ஒப்புதல் இன்றி மேல் விவரத்தை அளிக்க இயலாது என்றும் மொத்தத்தில் எங்கும் எதிலும் சட்டமீறம் என்பது இல்லை என்று வில்லியம் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles