29 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

நோய்தொற்று அலை ஓயவில்லை! எச்சரிக்கிறார் டாக்டர் நூர் இஸாம்

🔥 Views : 24
👁 Reading Now : 46

நாட்டில் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஸாம் அப்துல்லா எச்சரித்தார். புதிதாக பல தளர்வுகளும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். உலகிலுள்ள பல நாடுகளைப் போலவே நாமும் பேரிடரிலிருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டோம். எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. மலேசியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிக்கும் பொறுப்பை முறையாக நிறைவேற்றும் பட்சத்தில் இந்த போரிலிருந்து நாம் விடுபட முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles