
ம.இ.கா பாங்கி தொகுதி சுங்கை ராமால் கிளைத்தலைவர் டத்தோ ரவீந்திரன், மித்ராவில் இருந்து 8 லட்சம் வெள்ளி பெறவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக நம்பகத்தன்மையை ஆராயாமல், ஒரு யூடிப் சேனல், தன் பெயரைக் களங்கப்படுத்தும் விதமாகச் செய்தியை வெளியிட்டுள்ளதாக டத்தோ ரவீந்திரன் தனது புகாரில் தெரிவித்தார்.


