
லங்காவி சுற்றுலா முன்னோடித் திட்டத்தை அந்நிய நாட்டினருக்கும் திறந்து விடுவதற்கு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சுற்றுலா,கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான நடவடிக்கையை மலேசியா மேற்கொள்வதற்கு இந்நடவடிக்கை அவசியமாவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.


