31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு நிறைவேறுகிறது

🔥 Views : 40
👁 Reading Now : 67

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமான நடந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று நிலவரப்படி இந்தியாவில் 96 கோடியே 82 லட்சத்து 20 ஆயிரத்து 997 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சத்து 66 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்ட இன்னும் 3 கோடியே 18 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. இந்த இலக்கை எட்டியதும் துறைமுகங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் முழுவதும் திறக்க அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles