
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமியின் தூரநோக்கு சிந்தனை மற்றும் தீவிர முயற்சியால் கலிபோர்னியா தோட்டப் பள்ளிகளுக்கு அழகான தரை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 99 ஆண்டுகளுக்கான இந்த வீட்டின் விலை வெறும் 10 வெள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கலிடோனியா தோட்ட பாட்டாளிகளுக்கு சொந்த தரை வீடுகளை கட்டிக்கொடுத்து சாதனை படைத்திருக்கும் பேராசிரியர் டாக்டர் ராமசாமி மற்றும் இந்த வீடுகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ் நெஞ்சரும் எக்கோ வோர்ல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூவை மலேசிய இந்திய சமுதாயம் வெகுவாக பாராட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் தீபாவளி பெருநாளை கலிபோர்னியா தோட்ட பாட்டாளிகள் புதிய தரை வீடுகளில் கொண்டாடுவார்கள் என்று டாக்டர் ராமசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மலேசியாவில் தோட்டப் பாட்டாளிகளுக்காக வெறும் பத்து வெள்ளி விலையில் தரைவீடுகளை கட்டிக்கொடுத்த ஒரே மாநிலம் பினாங்கு மாநிலம் மட்டுமே.
