25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

15 லட்சம் அல்ல லட்சம் 21 லட்சம் வெள்ளி ஏ.கே. இராமலிங்கம் விளக்கம்

mala

மித்ரா மானியம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இதில் என் பெயரும் சேர்க்கப்பட்டு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று ம.இ.காவின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே ராமலிங்கம் தெரிவித்தார். கடந்த ஆண்டு மீன் வளத் துறையில் வாரிய உறுப்பினராக பொறுப்பேற்றேன். இந்தத் துறையில் இந்திய இளைஞர்கள். குறிப்பாக பி.40 பிரிவினர் ஈடுபட்டு வருமானம் பெறவேண்டும் என்று நான் ஆய்வு செய்து என்னுடை அரசு சாரா இயக்கத்தின் மூலம் மித்ரா விடம் விண்ணப்பம் செய்தேன். இந்தத் திட்டத்தை மித்ரா ஆய்வு செய்து எங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், இது நாள் வரை அந்தத் திட்டத்தை அமல் படுத்த மித்ரா நிதியை இன்னும் எங்களுக்கு ஒதுக்கவில்லை. இது 15 லட்ச திட்டம் அல்ல 21 லட்ச திட்டம் அதை சொல்லுவதில் எனக்கு அச்சம் இல்லை. இது நாள் வரை மித்ரா எனக்கு ஒரு வெள்ளி கூட கொடுக்கவில்லை. ஆனால், இந்த மீன் வளர்ப்பு முன் ஏற்பாடுகளுக்கு என் சொந்தப் பணமாக 1லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி செலவு செய்து வைத்துள்ளேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles