
வரும் 2022ஆம் ஆண்டை முன்னிட்டு தமிழ் பஞ்சாங்க காலண்டர் நேற்று பினாங்கு பட்டர்வெர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ எம் ராமச்சந்திரன் தலைமையில் ஆலயத் தலைவர் சஞ்சய், டத்தோ கலைச்செல்வன் மற்றும் டத்தோ ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இந்த தமிழ் பஞ்சாங்க காலண்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



