29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கோத்தா திங்கி தாஜேல் புதிய தமிழ்ப்பள்ளிக்கு திறப்பதில் என்ன சிக்கல் !!

🔥 Views : 7
👁 Reading Now : 69

பெற்றோர் ஆசிரியர் சங்கமும்,பள்ளி நிறுவகமும் மௌவுனம் களைய வேண்டும் என சந்திர சேகரன் கோரிக்கை!! கட்டி முடிக்கபட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கோத்த தீங்கி தஜோல் தமிழ்ப்பள்ளி இன்னமும் திறக்க முடியமால் இருக்கும் மர்மம் என்ன என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் உள்ளது என்பதை மறந்து விட கூடாது என்பதை அதன் தலைவர் காளிதாஸ் ரகு நினைவில் கொள்ள வேண்டும் என ஜசெக சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் நேரடி தொடர்பில் இருக்கும் பள்ளி நிருவாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மட்டுமே அந்த பள்ளிகூடம் திறப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இறங்க முடியும்,எனவே கல்வி இலாகவுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கையில் இறங்க வேண்டுமே ஒழியே கட்டக்குழு அல்ல என்பதை நினைவில் கொண்டு கலம் இறங்க வேண்டும் என்பதை அந்த இரண்டு தரப்பும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என ஜசெக தலைவர்களின் ஒருவரும் முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைருமான சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles