
உலகின் மிக பழமையான நட்சத்திர வரைபடம் என்று அறியப்படும் ஓர் அற்புத பழம்பொருள், பிரிட்டன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நெப்ரா ஸ்கை டிஸ்க் என்று அழைக்கப்படும் அப்பொருள், சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், அது வெண்கல காலத்தைச் சேர்ந்தது என்றும் நம்பப்படுகிறது. இந்த வட்ட வடிவிலான பொருள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து எடுக்கப்பட்டது. இது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
