
கோவிட்-19 தடுப்பூசி எதிர்ப்பாளர்களை நேரில் சந்திக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ ஆய்வுகளை அடிப்படையாக க் கொண்ட கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான விளக்கத்தையும் தகவல்களையும் தரும் நோக்கில் இந்த சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை உட்படுத்திய இந்த சந்திப்பு நிகழ்வுக்கு தாம் ஏற்பாடு செய்வதாக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நோர் அஸ்மி கூறினார். கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான சரியான விபரங்களை சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு வழங்க வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்விகளின் அடிப்படையில்தான் சுகாதார அமைச்சு எந்த முடிவையும் எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
