
நோய்த்தொற்று தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கூலிம் பாடாங் செராய் பத்து கிரேஸ் சிறார்கள் பராமரிப்பு இல்லத்திற்கு பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மு. கருப்பையா 10,000 வெள்ளி வழங்கி பேருதவி புரிந்துள்ளார். இந்த இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கியுள்ளனர். இவர்களை பராமரிக்கும் பணியில் 15 பணியாளர்கள் இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக இந்த பராமரிப்பு இல்லம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கிய வேளையில் இந்த சிறார்கள் இல்லத்தின் தேவையை அறிந்து மாண்புமிகு கருப்பையா 10,000 வெள்ளி வழங்கி உதவி புரிந்துள்ளார். மிக விரைவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சிறார்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் மாண்புமிகு கருப்பையா உதவி புரிந்து இருப்பதை சிறார்கள் பராமரிப்பு இல்லத்தின் தலைவர் ரமேஷ் பத்துமலை தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



