
வரும் நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று மலேசியா தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் நவம்பர் 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று மலாக்கா தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கனி தெரிவித்தார். மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேடுதல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நோய்த் தொற்று தாக்கம் இருப்பதால் வேட்புமனு தாக்கல் 5 தினங்களுக்கு அனுமதிக்க வேண்டும். அதேசமயம் வாக்களிப்பு 3 தினங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
