25.4 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

காரைக்குடி – ஊறவையல் புரவி எடுப்பு திருவிழா!

🔥 Views : 5,879
👁 Reading Now : 60

எம்.முருகன்
காரைக்குடி அருகே ஊறவையல் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழா மிகச் சிறப்பான நடைபெற்றது இதற்கு சிறப்பு வகையாக தொழிலதிபர் உஞ்சனை ராமசாமி அம்பலத்தின் மகன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்வினை தொடக்கி வைத்தார். காரைக்குடி அருகே ஊரவயல் காவல் தெய்வம் ஸ்ரீ பாலகுரு மகாசாஸ்தா அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அய்யனாருக்கு குதிரைகள் செய்து காணிக்கையாக செலுத்தினர். ஆண்டாண்டு காலமாக முன்னோர்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அய்யனாரின் அருள் பெற்றுச் சென்றனர். புரவி எடுப்பு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊறவையல் கிராமத்தார்களும் இளைஞர்களும் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles