25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டுமா? பக்கத்தான் ஹரப்பான் முடிவு செய்யட்டும் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் அறிவிப்பு

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் நிலையில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவம் முடிவு செய்யட்டும் என்று முன்னாள் மலாக்கா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் தெரிவித்தார். சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினரான அவர் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதால் மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. அம்னோவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் உட்பட 4 பேருக்கு வாய்ப்பு வழங்குவதா என்பது பக்கத்தான் ஹரப்பான் முடிவு செய்யட்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles