29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஒற்றுமை சீர்குழைவுக்கு மகாதீரும் ஒரு முக்கிய காரணம்: -துணை முதல்வர் இராமசாமி சாடல்

🔥 Views : 10
👁 Reading Now : 51

நாட்டில் ஒற்றுமை சீர் குழைவுக்கு மகாதீரும் ஒரு மூல காரணம்; குறிப்பாக, நாட்டில் நிலவும் அரசியல் பிரிவினைக்கும் இன ரீதியான பூசல்களுக்கும் துன் டாக்டர் ஒரு முக்கியமானவர் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் பழைய பல்லவியை மகாதீர் இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறார். ஆனால், மக்களோ மகாதீரின் இத்தகைய கூற்றுகளால் சளிப்பும் களைப்பும் அடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை என்று தமது முகநூலில் இராமசாமி குறிப்பிட்டுள்ளார். உண்மையில் மலாய் சமூகத்தில் ஏழ்மை என்பது இன்னமும் நீடிப்பதற்கு மலாய்த் தலைவர்களே மூல காரணம்; தங்களின் அதிகார நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு மலாய் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் ஏழ்மையில் உழல்வதையே அவர்கள் விரும்புகின்றனர். அப்படிப்பட்டவர்களில் மகாதீரும் ஒருவர் என்பதால், அவர் அதைப்பற்றி யெல்லாம் ஒன்றும் பேசுவதில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles