
இந்தியா மற்றும் தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியப் பிரஜைகளை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வர ஏர் மலிண்டோ சிறப்பு விமானம் மீண்டும் திருச்சி புறப்படுகிறது. வரும் மே 27ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு கோலாலம்பூர் கே எல் ஏ.ஐ விமான நிலையத்தில் இருந்து ஏர் மலிண்டோ சிறப்பு விமானம் திருச்சி புறப்படுவதாக கேபிஎஸ் டிராவல்ஸ் உரிமையாளர் கே.பி. சாமி தெரிவித்தார்.
மே 27ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு திருச்சி புறப்படும் ஏர் விமானத்தில் தமிழக பிரஜைகளும் பயணம் செய்கிறார்கள்.
திருச்சியில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் மீண்டும்அந்த விமானம் மலேசிய பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூர் திரும்புகிறது. தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியப் பிரஜைகள் இந்த சிறப்பு விமானத்தில் நாடு திரும்புகிறார்கள் என்று அவர் சொன்னார்.
இதனிடையே மலேசியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழக பிரஜைகள் பத்திரமாக தாயகம் திரும்ப இந்த சிறப்பு விமானம் பெரும் உதவியாக இருக்கும் என்று கேபி சாமி சொன்னார்.
தொடர்புக்கு கே.பி.சாமி 016-2626755, மற்றும் நிர்வாகி கவின் 016- 2229341 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.
