
கடந்த மார்ச் மாதம் சாலை விபத்துக்குள்ளாகிய லெட்சுமி ( தனித்து வாழும் தாய்) குடும்பத்திற்கு கிள்ளான் பன்டார் பாரூ இந்திய சமுக தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் மற்றும் தினா .சத்திஷ் ஆகியோர் உதவி கரம் நீட்டியுள்ளனர்.
லெட்சுமி மகனும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்துக்குள்ளாகி உடல் முடங்கிப் போன நிலைமையில் இப்போது உள்ளார். அவர்களின் தற்போதைய நிலைமையைக் கறுதி,தேவையான உணவு பொருட்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கியதும் அல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களையும் கேட்டு அறிந்து கொண்டோம் என்று அருள் நேசன் தெரிவித்தார்
விபத்தின் போது லெட்சுமியின் கால் எலும்பு உடைந்த காரணத்தினால் அவரின் காலில் உலோக உறுதி தட்டு பொருத்தப்பட வேண்டியதாயிற்று. லெட்சுமியின் இன்னொரு மகன் தான் தற்போது தனது குடும்பத்தை வழிநடத்தி வருகிறார் என்று அவர் சொன்னார்



