33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

கோவிட் -19 : பினாங்கில் 3 முதியோர் இல்லங்கள் மூடப்பட்டன

🔥 Views : 8
👁 Reading Now : 35

பினாங்கு ஜோர்ஜ்டவுனில் மூன்று முதியோர் இல்லங்களில் 36 கோவிட் – 19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அவை நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டன.இங்கு தங்கியுள்ள முதியோர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கோவிட் – 19 தொற்று கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டப் பின்னர்,இங்கு ஜாலான் காட்ஸ்,ஜாலான் சியாங் தெக் மற்றும் லெபோ செசில் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள் மூடப்பட்டதாக மாநில சமூகநல மற்றும் சுற்றுசூழல் குழு தலைவர் பீ பூன் போ கூறினார்.
பணியாளர்கள் மற்றும் இங்கு தங்கியுள்ள அனைவர் மீதும் பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதாக கூறிய அவர்,அந்த மூன்று முதியோர் இல்லங்களும் இன்னும் மாநில சமூகநல இலாகாவில் பதிந்துக் கொள்ளவில்லை என்றார்.


இங்குள்ளவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,மூடப்பட்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்,வருகையாளர்களுக்கும் அனுமதி இல்லையென்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினருமான பீ பூன் போ மேலும் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles