
நிர்வாகம் மற்றும் அரசியலில் இனங்கள் புறக்கணிக்க படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் முன்னாள் மந்திரி பெசாருமான அட்லி கேட்டுக் கொண்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் இனங்கள் புறக்கணிக்கப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார் அவர். இனம் நிறம் பார்க்காமல் நாம் அனைத்து இனங்களையும் அரவணைக்க வேண்டும் என்றார் அவர்.
