24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு விலாயா கெஅடிலான் இளைஞர் பிரிவு முழு வீச்சில் களமிறங்கும்!

🔥 Views : 21
👁 Reading Now : 39

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு விலாயா மாநிலத்தைச் சேர்ந்த கெஅடிலான் இளைஞர் பிரிவு முழு வீச்சில் களமிறங்கும் என்று மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி. பிரபாகரன் தெரிவித்தார். 2018இல் நடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் நம்பிக்கை துரோகத்தால் ஆட்சியைப் பறிகொடுத்தது. இப்போது நடைபெறும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் சொன்னார். பக்கத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவினருடன் இணைந்து விலாயா கெஅடிலான் இளைஞர் பிரிவு வெற்றிக்கு பாடுபடும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles