31 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

சுகாதார அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்!

🔥 Views : 44
👁 Reading Now : 45

திருச்சியிலிருந்து மலேசியா திரும்பிய ஒரு தம்பதியிடம் கெடுபிடியாக நடந்து கொண்டதாக கூறப்படும் சுகாதார அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கேட்டுக்கொண்டார். கடந்த வாரம் திருச்சியிலிருந்து நாடு திரும்பிய மலேசிய பெண் மற்றும் அவரது இந்திய கணவரிடம் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டது பெரும் வேதனை அளிக்கிறது
இவர்கள் 21 நாட்கள் தனித்திருக்க மற்றும் நோய்த்தொற்று பரிசோதனைக்கு 6, 400 வெள்ளி செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அந்நேரத்தில் அவருக்கு உதவ ஒருவர் முன் வந்திருக்கிறார். இருப்பினும்
இந்த பணத்தை திரட்ட முடியவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு அடுத்த விமானத்திலேயே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தலைமை மருத்துவர் மிரட்டி இருப்பதையும் டாக்டர் ராமசாமி சாடினார். இவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றப்போவதாக சுகாதார அதிகாரிகளை மிரட்டி இருப்பது வரம்பை மீறிய செயல்.
ஆகவே சுகாதார அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என டாக்டர் ராமசாமி தனது முகநூலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles