29.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றுக் கொண்டால் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அர்த்தமில்லை ராம் கர்ப்பால்

மலாக்கா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை வேட்பாளர்களாக எதிர்கட்சியினர் ஏற்றுக் கொண்டால் கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அர்த்தமில்லாமல் போய் விடும் என்று ஜ.செ.க. புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர், ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார். ஒருவேளை அந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட அனுமதிக்கப்பட்டால் மக்களின் நம்பக்கத்தன்மையை பக்காத்தான் நிச்சயமாக இழக்க நேரிடும் என்றார். முன்னதாக இதுபோன்ற நம்பிக்கைத் துரோகிகளால்தான் கடந்தாண்டில் அக்கூட்டணி தன் அதிகாரத்தை இழக்க நேர்ந்தது. ஆகவே இந்த சட்டமன்ற உறுப்பினர்களை பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட நாம் அனுமதி வழங்க கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles