
பினாங்கு இந்திய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சிக்காக புதிய ஜெர்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய செபராங் பிறை மாவட்ட இந்தியர் எப்ஏ தலைவர் ஸ்ரீ சங்கர் அதனை வெளியிட்டு அறிமுகம் செய்தார், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தளர்வு வழங்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரியில் பூவை எனப்படும் மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து லீக் மற்றும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் மலேசிய கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் மலேசிய பெண்களுக்கான கால்பந்து போட்டியிலும் இக்குழு பங்கேற்கிறது என்று அவர் கூறினார். இவ்விரு போட்டிக்காக இந்த புதிய கால்பந்து ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்ததாக ஸ்ரீ சங்கர் கூறினார்.
