25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை! முக்கிய குற்றவாளி கைது

வங்காளதேசத்தில் துர்கா பூஜையின்போது ஏராளமான இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன, இந்துக்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் அதிவிரைவு படையினர் களம் இறங்கினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள், வன்முறைக்கு காரணமானவர்கன் என சுமார் 600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இக்பால் உசைன் (வயது 35) கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்துக்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புடைய இரண்டாவது முக்கிய குற்றவாளி என நம்பப்படும் ஷைகத் மண்டல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles